இதனால் தமிழ்நாடு அரசு கடந்த 4ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிா்ணயம் செய்து அனுமதி வழங்கியது. அதேபோல இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தீபாவளி அன்று பட்டசுகளை கையாளும் முறைபற்றி பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. பட்டாசுகளை திறந்த இடத்தில் வெடிக்க வேண்டும். அருகில் தீப்பற்றும் பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தனிநபர்கள், சொத்துகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
The post தீபாவளி பண்டிகை.. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.