புதினா முந்திரி பக்கோடா

தேவையான பொருட்கள் :

கடலை மாவு – 2 கப்
முந்திரி பருப்பு – 1 கப்
அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்
சீரக தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
புதினா இலை – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:

மிக்ஸியில் புதினா, கொத்த மல்லியை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும். பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், சீரக தூள் சேர்த்து கலந்து விடவும்.பின்பு நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா சேர்க்கவும். பிறகு முந்திரி பருப்பு சேர்த்து கலந்து விடவும். அடுத்து சூடான எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும். பின்பு அரைத்த புதினா கொத்தமல்லி சட்னி, தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறு சிறு உருண்டைகளாக மாவை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான புதினா முந்திரி பக்கோடா தயார்.

The post புதினா முந்திரி பக்கோடா appeared first on Dinakaran.