மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, நடவடிக்கையாக கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-128க்குட்பட்ட சாதிக் பாஷா நகர் மற்றும் சஞ்சய் காந்தி காலனி ஆகிய பகுதிகளில் ஏற்கனவே உள்ள பழைய மழைநீர் வடிகால்களை இடித்துவிட்டு, புதிய மழைநீர் வடிகால்கள் அமைப்பது குறித்துப் பார்வையிட்டு மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
வார்டு-129க்குட்பட்ட பெரியார் தெருவில் ரூ.14 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குழாய் வடிவிலான மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மஜ்ஜீத் நகரில் தற்போது பெய்த கனமழையில் அதிகளவு நீர் தேங்கியதைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைநீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் கூடுதலாக மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மேயர் விருகம்பாக்கம் கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் 4 ரொபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் மூலம் மழையின் காரணமாக தேங்கிய ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்களை அகற்றும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு கொட்டப்பட்டிருந்த கட்டிடக் கழிவுகளை உடனடியாக அகற்றிட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், வார்டு-127க்குட்பட்ட சீனிவாசன் நகரில் ஏற்கனவே உள்ள பழைய மழைநீர் வடிகால்களை இடித்துவிட்டு, புதிய மழைநீர் வடிகால்கள் அமைப்பது குறித்துப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ஜெய் நகரில் தற்போது பெய்த கனமழையில் அதிகளவு நீர் தேங்கியதைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைநீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் கூடுதலாக மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் பொ.லோகு, ஆர். ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா, மு.ரவிசங்கர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post கோடம்பாக்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் பிரியா ஆய்வு appeared first on Dinakaran.