சென்னை, தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

சென்னை; சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு தெற்கு டாக்டர்.கண்ணன், மேற்பார்வையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு CCTV கேமராக்களின் கண்காணிப்பு மையம் R-1 மாம்பலம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டு இன்று (22.10.2024) சென்னை பெருநகர காவல் ஆணையாளரால் தொடங்கி வைக்கப்பட்டது.

பொதுமக்கள் பொருட்கள் வாங்க அதிகம் கூடும் தியாகராயநகர் மற்றும் பாண்டி பஜார் ஆகிய இடங்களில் 07 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள், 03- காவல் உதவி மையம், 01- தற்காலிக காவல் உதவி கட்டுப்பாட்டு அறை, 12-PA System, 75-கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள், 05-Body Worn கேமராக்கள், 02-டிரோன் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் நடப்பு நிகழ்வுகளை கண்காணித்து குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிய இரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலைகளில் ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொது மக்களின் குழந்தைகளுக்கு அவர்களது பெயர் மற்றும் பெற்றோரின் கைபேசி எண் கொண்ட கைமணிக்கட்டில் கட்டும்படியான Wrist band வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவலின் கீழ் இயங்கும் டிரோன் போலிஸ் யுனிட் மூலமாக அதி உயரத்தில் நவீன கேமராக்கள் உடன் பறக்கும் டிரோன்கள் வாயிலாக பொதுமக்கள், வயதானவர்கள், குழந்தைககள் மற்றும் சந்தேக நபர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றங்களை கண்காணித்து தடுக்கும் பொருட்டு, அனைத்து குற்றவாளிகளின் தரவுகளை கொண்ட FRS செயலி பொருத்தப்பட்ட 64 கேமராக்கள் மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குற்றங்களை தடுக்கும் பொருட்டு சாதாரண உடையில் 15 ஆண் மற்றும் பெண் காவலர்கள் 5 குழுக்களாக பிரிந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 136- காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், 100- ஆயுதப்படை ஆளிநர்கள், 100-ஊர் காவல் படை மற்றும் குற்றங்ளை தடுக்க சாதாரண உடையில் 15-ஆண் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் 12.10.2024-ம் தேதி முதல் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அவசர பயன்பாட்டிற்காக 2 கைபேசி எண்கள் (7358543058, 8438669822) உருவாக்கப்பட்டும், 02 ஆம்புலன்ஸ்கள், 02 தீயணைப்பு வாகனங்கள் அவசர கால பயன்பாட்டிற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

The post சென்னை, தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் appeared first on Dinakaran.

Related Stories: