பலாக்காய் சாப்ஸ்

தேவையானவை:

பலாக்காய் – கால் பகுதி,
உப்பு – அரை டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 10,
கறிவேப்பிலை – 5 இலை,
எண்ணெய் – கால் கப்.

அரைக்க:

மிளகு – கால் டீஸ்பூன்,
சீரகம் -கால் டீஸ்பூன்,
இஞ்சி – ஒரு துண்டு ,
பூண்டு – 4 பல்,
தக்காளி – 2,
மஞ்சள்தூள் – கால்டீஸ்பூன்.

செய்முறை:

பலாக்காயை சதுரமான துண்டுகளாக நறுக்குங்கள் (சிறிது மோர் கலந்த தண்ணீரில்பலாக்காயை நறுக்கிப் போட்டால், கருக்காது). அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்குஅரைத்துக்கொள்ளுங்கள். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம்போட்டு வதக்குங்கள். பிறகு, அரைத்த மசாலாவைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்துவரும்வரைவதக்குங்கள். பலாக்காயைப் போட்டுக் கிளறி மூடி, சிறு தீயில் வைத்து வேகவிட்டு, வெந்தபிறகுசுருள சுருளக் கிளறி இறக்குங்கள்.

The post பலாக்காய் சாப்ஸ் appeared first on Dinakaran.