கம்பிளி-சுந்தரபாண்டியபுரம் சாலையில் ரூ.1.65 கோடியில் தடுப்புச்சுவர் அமைப்பு

செங்கோட்டை,அக்.22: கம்பிளி – சுந்தரபாண்டிபுரம் நெடுஞ்சாலையில் கம்பிளி குளத்தின் அருகே கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது சாலையின் இருபுறமும் மண் சரிந்து சேதமடைந்தது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இதையடுத்து குளத்தின் அருகேயுள்ள சாலையில் கரையில் தடுப்புச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு ரூ.1.65 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதைதொடர்ந்து சாலையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி வேகமாக முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு பொதுமக்கள், விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

The post கம்பிளி-சுந்தரபாண்டியபுரம் சாலையில் ரூ.1.65 கோடியில் தடுப்புச்சுவர் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: