தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அரசாணை வெளியீடு..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் வரும் 31 -ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாட திட்டமிட்டு உள்ள பலரும் ரெயில், பஸ் என அனைத்திலும் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். இந்த முறை தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. அதற்கு மறுநாளான வெள்ளிக்கிழமை பணி நாளாகும். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்பதால் சொந்த ஊர் சென்றவர்கள் தீபாவளி அன்றே கிளம்ப வேண்டியிருந்தது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான விடுமுறை தினம் என்பதால் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை அறிவித்தால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். சொந்த ஊர்களில் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப முடியும் என்பதால், வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை 31.10.2024 வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தீபாவளிக்கு அடுத்த நாள் 01.11.2024 வெள்ளிக் கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள் , பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: