கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறும் நிலையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

நெல்லிக்குப்பம் : கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே நடுவீரப்பட்டு அடுத்த சி.என். பாளையம் பகுதியில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட புகழ்வாய்ந்த மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோயில் உள்ளது இக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. தற்போது இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

தரையில் உள்ள செங்கற்களை அகற்றிவிட்டு புதிதாக கருங்கற்கலான தரைத்தளம் அமைக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. கோயில் கொடிமரம் அருகில் கருங்கடல் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் அதனைத் தொடர்ந்து நேற்று பள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமியின் மூலவர் கோயில் அர்த்தமண்டபம் பகுதியில் கருங்கடல்கள் தரை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.

அப்போது படிக்கட்டில் பக்கத்தில் தரையை உடைத்த போது கருங் கற்களால் சத்தம் கேட்டது பின்னர் அந்த இடத்தை தூய்மை செய்து பார்த்தபோது கருங்கற்களால் ஏதோ மூடி வைத்தது போல் காணப்பட்டது அதனை வேலை செய்யும் ஆட்கள் அந்த கருங்கட்களை அகற்றி பார்த்த போது கருங்கட்களின் கீழ் அறையும் அறையை சுற்றி படிக்கட்டுகளும் இருந்தது தெரிய வந்தது பின்னர் அந்த அறையை ஆய்வு செய்தபோது அறையில் இருந்து மன்னர்கள் காலத்தில் இக்கோயிலில் இருந்து மற்றொரு பகுதிகளுக்கு செல்லும் வகையில் 3 புறமும் படிகட்டுகள் அமைக்கப்பட்டு மக்கள் அறியாதவாறு தரையின் சுரங்கப்பாதை வழியாக செல்லும் அளவிற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் சுரங்கப் பாதையை காண கோயிலை சூழ்ந்தனர் இந்த சுரங்கப்பாதை பல ஆண்டுகளாக மூடியே நிலையில் இருப்பதால் விஷ வாயுக்கள் தாக்க நேரிடும் என்பதால் சுரங்கப்பாதையை கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக மூடிவிட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சி என் பாளையம் மீனாட்சி அம்மன் சொக்கநாதர் கோயிலில் சுரங்கப்பாதை இருந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

The post கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறும் நிலையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: