ஓசூரில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

ஓசூர், அக்.19: ஓசூர் அருகே திட்ட பணிகளுக்கான பூமி பூஜையை மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில், நபார்டு திட்டத்தின் கீழ் நந்திமங்கலம் ஊராட்சியில் ₹44 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பெருமாள்பள்ளி கிராமத்தில் ₹18.42 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சென்னசந்திரம் கிராமத்தில் ₹18.42 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கனிமங்கள் மற்றும் குவாரிகள் நிதியில் ஈச்சங்கூர் ஊராட்சி கூசனப்பள்ளி கிராமத்தில் ₹14.31 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், சேவகானப்பள்ளி ஊராட்சி கக்கனூர் கிராமத்தில் ₹14.31 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், அலசப்பள்ளி ஊராட்சி பட்வரப்பள்ளி கிராமத்தில் ₹14.31 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டும் பணிகள் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு, பூமிபூஜை செய்து பணிகளை ெதாடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, மாநகர பொருளாளர் தியாகராஜன், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கலைசெழியன், சேகர், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ஓசூரில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: