சேமியா ரவா அல்வா

தேவையானவை:

ரவை – ஒரு கப்,
சேமியா – அரை கப்,
சர்க்கரை – இரண்டரை கப்,
நெய் – அரை கப்,
முந்திரி – 10,
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்,
ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர் பொடி – ஒரு சிட்டிகை,
பால்கோவா – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ரவை, சேமியாவை தனித்தனியே வறுக்க வேண்டும். மீதியுள்ள நெய்யை காய வைத்து அதில் முந்திரியை போட்டு நிறம் மாறாமல் வறுத்து சேமியா, ரவையை சேர்க்க வேண்டும். பிறகு, 4 டம்ளர் தண்ணீரை நன்றாகக் கொதிக்க விட்டு, ரவை, சேமியா கலவையில் ஊற்றி, வேக விட வேண்டும். கலர் பொடி சேர்த்து வெந்ததும், சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை கரைந்து எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும்போது இறக்கி ஏலக்காய்த்தூள், பால்கோவா கலந்து பரிமாற வேண்டும்.

The post சேமியா ரவா அல்வா appeared first on Dinakaran.