தொடரும் உயிரிழப்புகள்… மதுரையில் கைவிடப்பட்ட கிரானைட் குவாரியில் உள்ள பள்ளங்களை சீரமைக்கக் கோரிய வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை : மதுரையில் கைவிடப்பட்ட கிரானைட் குவாரியில் உள்ள பள்ளங்களை நிரப்பி சீரமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மதுரை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மேலூரைச் சார்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “செயல்படாமல் உள்ள கிரானைட் குவாரி பள்ளங்களில் தெரியாமல் விழுந்து நிகழும் உயிரிழப்புகள் தொடர்கின்றன. யா.ஒத்தக்கடை, இலங்கிப்பட்டி குவாரியில் விழுந்து 2 பேர் பலியாகினர். வேலி அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கைவிடப்பட்ட கிரானைட் குவாரிகளில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாமல் உள்ளன.

நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆட்சியர் தலைமையிலான குழு, கைவிடப்பட்ட குவாரிகளை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சட்டவிரோத குவாரி நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். மதுரையில் கைவிடப்பட்ட கிரானைட் குவாரியில் உள்ள பள்ளங்களை நிரப்பி சீரமைக்க உத்தரவிட வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில், “கிரானைட் குவாரி நடத்தி ரூ.16,000 கோடிக்கு மேல் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால் சீரமைப்பு பணிகள் செய்ய முடியவில்லை,”இவ்வாறு தெரிவித்தது. இதையடுத்து, மதுரையில் கைவிடப்பட்ட கிரானைட் குவாரியில் உள்ள பள்ளங்களை நிரப்பி சீரமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மதுரை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கனிமவளத் துறையின் முதன்மைச் செயலர், ஆணையர் ஆகியோரும் நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.

The post தொடரும் உயிரிழப்புகள்… மதுரையில் கைவிடப்பட்ட கிரானைட் குவாரியில் உள்ள பள்ளங்களை சீரமைக்கக் கோரிய வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: