அதிமுகவின் 53வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர் மாளிகையில் கழக கொடியை ஏற்றி வைத்தார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கழக கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு வந்திருக்கும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா போன்றோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதிமுக வின் 53வது ஆண்டு விழா தொடக்கத்தை கொண்டாடும் விதமாக சென்னையில் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.

 

The post அதிமுகவின் 53வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர் மாளிகையில் கழக கொடியை ஏற்றி வைத்தார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Related Stories: