ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.100 கோடியில் வடிகால் பணி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்


ஆலந்தூர்: ஆதம்பாக்கம் கூட்டுறவு கட்டிட சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு புதிய பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், மணப்பாக்கம், முகலிவாக்கம் போன்ற பகுதிகளில் மழை நீர் வெளியேற வடிகால்கள் அகலப்படுத்தி ஆழப்படுத்தப்பட்டுள்ளது.

ஆலந்தூர் மாதவபுரம், கண்ணன் காலனி பகுதிகளில் 4 அடி தண்ணீர் தேங்கி நிற்கும். அந்த பகுதிகளில் கல்வெட்டுகள் அமைத்து தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. ஆலந்தூர் தொகுதியில் ரூ.100 கோடி செலவில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அடைமழை பெய்ததாலும் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,’’ என்றார்.

The post ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.100 கோடியில் வடிகால் பணி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: