கைத்தறி பாதுகாப்பு சட்டத்தின் மூலம் நெசவாளர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உறுதி


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நேற்று பாஜ உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமை தொடங்கி வைத்து ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: கைத்தறி பாதுகாப்பு சட்டம் மூலம், நெசவாளர்களுக்கு உள்ள பிரச்னை குறித்து ஜவுளித்துறை அமைச்சரிடம் கூறி தீர்வு காணப்படும். கடந்த 10 ஆண்டில் தேவையில்லாத 1,500 சட்டங்களை பிரதமர் மோடி நீக்கியுள்ளார். இந்தியாவில், 7 மெகா டெக்ஸ்டைல் பார்க் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப்படுகிறது. இது அருப்புக்கோட்டை பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

மேலும் டெக்ஸ்டைல்களுக்கு மானியத்தில் மெஷினரி, வெளிநாட்டில் இருந்து நூல்கள் இறக்குமதிக்கு வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெக்ஸ்டைல் தொழில் அந்நிய செலாவணியை ஈட்டி தரும் ஒரு மிகப்பெரிய தொழில். 2047ல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற நோக்கில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அப்துல் கலாம் கண்ட கனவு 2047ல் நனவாகும். இவ்வாறு கூறினார்.

The post கைத்தறி பாதுகாப்பு சட்டத்தின் மூலம் நெசவாளர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: