குடும்ப தகராறில் விபரீதம் கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி கைது

குடகு: விராஜ்பேட்டை அருகே குடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். குடகு மாவட்டம் குஷால்நகரை சேர்ந்த தர்மா (26) என்பவரும் பைரம்பாடா கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஜா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் விராஜ்பேட்டை தாலுகாவின் மூர்நாடுவின் காந்திநகரில் வசித்து வந்துள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கு முன் காந்திநகரின் பத்மினி என்பவர் வீட்டில் வாடகைக்கு இருந்துள்ளனர்.

இந்நிலையில் இத்தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஸ்ரீஜா கத்தியால் கணவன் தர்மாவை குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்ரீஜாவை கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post குடும்ப தகராறில் விபரீதம் கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி கைது appeared first on Dinakaran.

Related Stories: