மக்கள் ஆசி எனக்கு இருக்கும் வரை என்னை யாராலும் அசைக்க முடியாது: முதல்வர் சித்தராமையா அதிரடி

பெங்களூரு: எப்படியாவது ஆட்சியிலிருந்து என்னை அகற்ற வேண்டும் என்று பாஜ தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டிய முதல்வர் சித்தராமையா, மக்கள் ஆசி தனக்கு இருக்கும்வரை யாராலும் அசைக்க முடியாது என்று கூறியுள்ளார். பெலகாவியில் உள்ள சவுதத்தி யல்லம்மா மலையில் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலாப் பயணிகளுக்காக ரூ.22.45 கோடி செலவில் கட்டப்பட்ட அறைகள் தங்குமிடம், பார்க்கிங், தோட்டம் மற்றும் இதர உட்கட்டமைப்புகளுக்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்ட கடைகள், விருந்தினர் மாளிகையை திறந்துவைத்து பேசிய முதல்வர் சித்தராமையா, இந்துக்கள், இந்துத்துவா என்ற பெயரில் மக்களை பிரிக்கும் வேலையை பாஜ செய்கிறது.

இந்த நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் பாஜவை ஆட்சியிலிருந்து விலக்கிவைக்க வேண்டும். எங்கள் ஆட்சி மாநிலத்தில் இன்னும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதற்குள்ளாக யல்லம்மா தொகுதியை சிறப்பான முறையில் வளர்ச்சி பெற செய்வதாக உறுதியளித்தார். மூடா முறைகேடு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டுவரும் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜ வலியுறுத்தி வரும் நிலையில், மக்கள் ஆசி தனக்கு இருக்கும் வரை தன்னை யாராலும் அசைக்க முடியாது என்று சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த விழாவில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் எச்.கே.பாட்டீல், ராமலிங்கரெட்டி, சதீஷ் ஜார்கிஹோளி, லட்சுமி ஹெப்பாள்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post மக்கள் ஆசி எனக்கு இருக்கும் வரை என்னை யாராலும் அசைக்க முடியாது: முதல்வர் சித்தராமையா அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: