* மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கையின் மகிளா ஜெயவர்தனே (47 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக எம்ஐ அணியின் உலகளாவிய கிரிக்கெட் தலைவராக பொறுப்பு வகித்து வந்ததுடன், 2017-2022 வரை தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.
* நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெர்னார்டோ சில்வா தலா ஒரு கோல் போட்டனர். போலந்து வீரர் ஜான் பெட்னாரெக் ‘ஓன் கோல்’ போட்டது அந்த அணிக்கு பின்னடைவைகொடுத்தது. போலந்து சார்பில் பியோதர் ஸிலின்ஸ்கி ஆறுதல் கோல் அடித்தார்.
* பரோடா அணியுடனான ரஞ்சி கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் 262 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி. 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் பரோடா 290, மும்பை 214 ரன் எடுத்த நிலையில், பரோடா 2வது இன்னிங்சில் 185 ரன்னுக்கு சுருண்டது (க்ருணால் பாண்டியா 55, அதித் ஷேத் 26, மகேஷ் பிதியா 40). மும்பை பந்துவீச்சில் தனுஷ் கோடியன் 5, ஹிமான்ஷு 3, ஷர்துல், அவஸ்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
* ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரில் ஸ்காட்லாந்து அணியுடன் நேற்று மோதிய இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஸ்காட்லாந்து 20 ஓவரில் 109/6; இங்கிலாந்து 10 ஓவரில் 113/0 (மயா பவுசியர் 62*, டானி வியாட்-ஹாட்ஜ் 51*).
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.