கோவையில் 2 மணி நேரத்திற்க்கு மேலாக பலத்த மழை: வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி

கோவை: கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3 மணி நேரத்திற்க்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தை பொருத்த வரையில் கடந்த 5 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை பெய்த நிலையில், இன்று காலை முதல் மாலை வரை மேகமுட்டமாக காணப்பட்டது.

இந்த சூழலில் கடந்த 3 மணி நேரத்திற்க்கும் மேலாக கோவை மாநகர் பகுதியை பொறுத்த வரையில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், ராமநாதபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும், அதே போல புறநகர் பகுதியை பொறுத்த வரையில், பேரூர், மாதம்பட்டி, மதுரக்கரை, உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.

தற்போதுவரைமழை பெய்து வரக்கூடிய சூழலில் முக்கிய சாலைகளில் மழைநீர் பெறுக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஒவ்வொரு முறையும் மழை வரும் போது அங்கு இருக்க கூடிய சுரங்கபாதைகளில் மழைநீர் தேங்ககூடிய நிலை இருந்தது. இந்த நிலையில் தற்போது அங்கு மோட்டார்கள் அமைக்கப்பட்டு அங்கு தேங்ககூடிய மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்தப்படுகிறது. இதனால் முக்கிய சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை. இருப்பினும் பல்வேறு சாலைகள் மழைநீரில் மூழ்கியுள்ளது.

சிங்காநல்லூரில் கனமழையால் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. லே-அவுட் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரில் கழிவுநீரும் கலந்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சுமார் 3 மணி நேரத்திற்க்கும் மேலாக கோவை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வரும் சூழலில் பொதுமக்கள் சாலைகளில் செல்லும் போது கவனமாக செல்ல அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post கோவையில் 2 மணி நேரத்திற்க்கு மேலாக பலத்த மழை: வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: