மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளிக்கு முன்பு சீருடைகள் வழங்க வலியுறுத்தல்

 

ஈரோடு, அக். 10: தீபாவளிக்கு முன்பாக அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் சீருடைகள் வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் மாநகராட்சி ஆணையாளர் மனிஷிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், டிரைவர்கள், மேஸ்திரிகள் உள்ளிட்டவர்களுக்கு தரமான சீருடைகள் வழங்க வேண்டும், 2 ஆண்டுகள் பணிநிறைவு செய்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்து பணிபாதுகாப்பு உள்ளிட்ட இதர சலுகைகளை வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும், பணி ஓய்வு பெறும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளிக்கு முன்பு சீருடைகள் வழங்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: