மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 352 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல கட்டமாக இதுநாள் வரை 170.60 கோடி ரூபாய் மதிப்பிலான 188 தாழ்தள பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் தற்பொழுது 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகள் இன்று (09.10.2024) முதல் இயக்கப்பட உள்ளது. புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளது.இந்நிகழ்வில், போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., ஜெர்மன் குடியரசின் துணை தூதரகத்தின் பொது துணை தூதர் மிச்செல குச்லர் (Michaela Kuchler), ஜெர்மன் வங்கியின் இந்திய நாட்டிற்கான இயக்குநர் திரு. உல்ஃப் முத் (Wolf Muth), முதுநிலை போக்குவரத்து நிபுணர் சுவாதி கண்ணா, மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் திரு.செ.நடராஜன், சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநர் திரு.சு.ரங்கநாதன், தமிழ்நாடு போக்குவரத்து நிதி கழக இணை மேலாண் இயக்குநர் திரு.வெ.வெங்கட்ராஜன், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
The post 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகளின் இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்!! appeared first on Dinakaran.