மார்ச் மாதத்தில் இருந்து உட்கட்சி தேர்தல் தொடக்கம்; 2022 அக். 1ம் தேதிக்குள் காங்கிரசுக்கு புதிய தலைவர்.! கட்சியின் தேர்தல் குழுத் தலைவர் தகவல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் அடுத்தாண்டு அக்டோபர் 1ம் தேதிக்குள் தேர்வு செய்யப்படுவார் என்று கட்சியின் தேர்தல் குழுத் தலைவர்  மதுசூதன் மிஸ்திரி தெரிவித்தார். கடந்த 2019ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அப்போதைய தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் கடந்த மூன்று ஆண்டாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு ெசய்ய வேண்டும் எனக்கூறி கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் போர்க் கொடி தூக்கியும், இதுவரை புதிய தலைவர் நியமனம் தொடர்பாக எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாக இல்லை. இந்நிலையில் சமீபத்தில் சோனியா காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உட்கட்சித் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைமுறை அடுத்தாண்டு (2022) செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும். உறுப்பினர் சேர்க்கை தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை முடிவடையும். டிஜிட்டல் முறையிலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதத்தில் இருந்து, தொகுதி, மாவட்டம் மற்றும் மாநிலம் போன்ற படிநிலைகளில் தேர்தல் செயல்முறைகள் தொடங்கப்படும். அதன்பின்னர் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் செயல்முறை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும். எங்களது தேர்தல் அட்டவணையின்படி செயல்முறைகள் முடிந்தால், 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்குள் கட்சியின் புதிய தலைவர் பொறுப்பேற்பார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்துவது குறித்து மத்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படும்’ என்றார்….

The post மார்ச் மாதத்தில் இருந்து உட்கட்சி தேர்தல் தொடக்கம்; 2022 அக். 1ம் தேதிக்குள் காங்கிரசுக்கு புதிய தலைவர்.! கட்சியின் தேர்தல் குழுத் தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: