ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அமோகம்

 

ஈரோடு, அக். 9: ஈரோடு ஜவுளி சந்தையில் கடந்த வாரத்தைவிட நேற்று விற்பனை அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி மார்க்கெட் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தினை சுற்றிலும் வாரச்சந்தை கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 1ம் தேதியில் இருந்து தீபாவளி சீசன் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற வாராந்திர ஜவுளி சந்தையில் மொத்த மற்றும் சில்லறை ஜவுளி விற்பனை அதிகமாக நடந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான ரெடிமேடு ஆடைகள் மற்றும் சேலைகள் ஆகியவை அமோகமாக விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர். இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:
தீபாவளிக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், சட்டை, பேண்ட், சுடிதார் போன்ற ரெடிமேட் உள்பட அனைத்து வகையான ஜவுளிகளும் விற்பனைக்கு வந்துள்ளது. ஜவுளிகளை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகளும் கலந்துகொண்டு ஜவுளிகளை வாங்கி சென்றனர். சில்லரை விற்பனை வழக்கம்போல நடைபெற்றபோதிலும், மொத்த விற்பனையானது 40 சதவீதத்திற்குமேல் நடைபெற்றது.
இவ்வாறு கூறினர்.

The post ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: