இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

ஸ்வீடன்: 2024-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஜே.ஹாப்ஃபீல்ட் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜாஃப்ரே இ.ஹிண்டனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மிஷின் லேர்னிங் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர்கள் ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு மற்றும் கெஃப்ரே இ. கிளிண்டன் ஆகிய இருவருக்கும் 2024ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட உள்ளது. ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு அமெரிக்காவில் உள்ள பிரிண்ட்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் கனடாவில் உள்ள ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் கெஃப்ரே இ. கிளிண்டனும் பேராசிரியர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

செயற்கை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மிஷின் லேர்னிங் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஹாப்ஃபீல்ட் நெட்வொர்க் வடிவங்களைச் சேமிக்க முடியும் மற்றும் அவற்றை மீண்டும் உருவாக்குவதற்கான ஒரு முறையைக் கொண்டுள்ளது. நெட்வொர்க்கிற்கு முழுமையடையாத அல்லது சற்று சிதைந்த வடிவத்தைக் கொடுக்கும்போது, ​​முறையானது மிகவும் ஒத்ததாக இருக்கும் சேமிக்கப்பட்ட வடிவத்தைக் கண்டறிய முடியும்.

கடந்த 1901 ம் ஆண்டிலிருந்து நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளை கவுரவிக்கும் வகையில் ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நோபல் பரிசை நிறுவினார். அவரது நினைவுதினமான டிசம்பா் 10-ம் தேதி இந்த பரிசு வழங்கப்படும். இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்றும்,வேதியலுக்கான நோபல் நாளையும், இலக்கியத்தில் சாதனை படைத்தவர்களுக்கான விருது நாளை மறுநாளும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு 11ம் தேதி அறிவிக்கப்படும்.

The post இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: