தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து ஜெயா பச்சன் விலகல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு நிலைக்குழுக்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். பாஜ எம்பி நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல் தொழில்நுட்ப துறையின் நிலைக்குழுவில் சமாஜ்வாடி எம்பி ஜெயா பச்சன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதில் விருப்பம் இல்லை என்று ஜெயா பச்சன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்,மாநிலங்களவை செயலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பசவராஜ் பொம்மை தலைமையிலான தொழிலாளர், ஜவுளி மற்றும் திறன் வளர்ச்சித்துறையின் நிலைக்குழுவின் உறுப்பினராக ஜெயா பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் துறைக்கான நிலைக்குழு உறுப்பினராக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேட் கோகலே, தகவல் தொழில்நுட்ப துறை நிலைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவு துறை நிலைக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள எம்பிக்கள் ஏ.ஏ.ரஹீம்(மார்க்சிஸ்ட்), கிரிராஜன்(திமுக) ஆகியோர் வீட்டு வசதி மற்றும் நகர்புற துறைக்கான நிலைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து ஜெயா பச்சன் விலகல் appeared first on Dinakaran.

Related Stories: