வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 2.1 சதவீதம், அதாவது 1,769 புள்ளிகள் சரிந்து 82,497 புள்ளிகளானது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 547 புள்ளிகள் சரிந்து 25,250 புள்ளிகளில் நிறைவடைந்தது. இந்த கடும் சரிவால், மும்பை பங்குச்சந்தையில் ரூ.4,74,86,464 கோடியாக இருந்த பங்குகளின் மதிப்பு, ரூ.9,78,778 கோடி சரிந்து ரூ.4,65,07,685 கோடியானது. இதுபோல், கடந்த செப்டம்பர் 30ம் தேதியிலும் பங்குகளின் மதிப்பு ரூ.3,57,885 கோடி வீழ்ச்சி அடைந்தது. அதாவது 3 நாட்களிலேயே பங்குகளின் மதிப்பு ரூ.13,36,664 கோடி சரிந்ததுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் ஒரு புறம் இருக்க, சீனாவில் முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்ததால், இந்தியாவுக்கு வர வேண்டிய வெளிநாட்டு பங்கு முதலீடுகள் சீனாவுக்கு திரும்பியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு appeared first on Dinakaran.