விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மின்கம்பத்தை தொட்டபோது மின்சாரம் தாக்கியதில் குழந்தை உயிரிழந்துள்ளது. இருக்கன்குடியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சம்யுக்தா(5) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மின் கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்படுவதாக ஏற்கனெவே பலமுறை புகார் அளித்ததாக மக்கள் தகவல் அளித்துள்ளனர்.