×

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

நாமகிரிப்பேட்டை, செப்.30: நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ரத்த பரிசோதனை, இசிஜி, எக்கோ, கண், கர்ப்பை புற்று, மார்பக புற்று, தொற்று நோய்களுக்கான பரிசோதனை, காசநோயை கண்டறிவதற்கான எக்ஸ்ரே, தொழுநோயை கண்டறிதல் ஆகிய பரிசோதனைகள் நடத்தப்பட்டு மேல் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு சேலம், கோவை பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இம்முகாமில் பேரூராட்சி மன்ற தலைவர் சேரன், துணை தலைவர் அன்பழகன், செயல் அலுவலர் ஆறுமுகம், வட்டார மருத்துவ அலுவலர் தயாசங்கர், சுகாதார மேற்பார்வையாளர் மாதேஸ்வரன், தூய்மை அலுவலர் லோகநாதன், தூய்மை மேற்பார்வையாளர் காளியப்பன் மற்றும் கவுன்சிலர்கள் சுரேஷ், மணிக்குமார், தீபா, ராமலிங்கம், சாந்தி, நல்லம்மாள், கனகவல்லி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

The post தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Camp for Sanitation Workers ,Namakrippet ,Namakripet Municipality ,camp ,
× RELATED திருச்செந்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்