×

திருச்செந்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ஆறுமுகநேரி, டிச. 10: காயல்பட்டினம் நகராட்சி மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் குமார்சிங், முகாமை துவக்கி வைத்தார். முகாமில் நகராட்சி தூய்மை பணியாளர்கள், தனியார் தூய்மை பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர். தலைமை மருத்துவர் பாபநாசக்குமார் தலைமையில் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் துப்புரவு ஆய்வாளர் செல்லப்பாண்டி உள்பட தூய்மை இந்தியா இயக்க பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

The post திருச்செந்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Camp for ,Tiruchendur ,Arumuganeri ,Tiruchendur Government Hospital ,Kayalpattinam Municipality and Government Hospital ,Municipal Commissioner ,Kumar Singh ,camp for sanitation workers ,
× RELATED ஒரு மாதத்திற்கு பிறகு திருச்செந்தூர்...