சென்னையில் இன்று, நாளை தேசிய தொல்குடி மாநாடு


சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பழங்குடியின மொழிகளை ஆவணப்படுத்துவதற்கான உரிய வழிமுறைகளை கண்டறிய புகழ்பெற்ற தேசிய கல்வி நிலையங்கள் மற்றும் ஆய்வு மையங்களில் பணிபுரியும் ஆய்வாளர்களை கொண்டு ‘தமிழக பழங்குடியினரின் கலாச்சாரத்தை பாதுகாத்தல் மற்றும் வளப்படுத்துதல்’ என்ற தலைப்பில் 2 நாள் தேசிய தொல்குடி மாநாடு இன்றும், நாளையும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தலைமையில் ’வெஸ்டின்’ சென்னை மற்றும் ’சென்னை சமூகப் பணி பள்ளியில்’ நடைபெறவுள்ளது.

மாநாட்டின் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சிய அரங்கில், தமிழ்நாடு பழங்குடியினரின் பண்பாட்டு நிகழ்வுகளை எடுத்துரைக்கும் விதமாக கணியன் கூத்து, பளியர் மற்றும் குருமன்ஸ் ஆகிய பழங்குடியினரின் நடனங்கள் நடைபெற உள்ளன. மேலும், தோடா எம்ப்ராய்டரி, குரும்பா ஓவியங்கள் மற்றும் காட்டுநாயக்கர், இருளர், கோத்தர்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சென்னையில் இன்று, நாளை தேசிய தொல்குடி மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: