யுனெஸ்கோ குழுவினர் வருகை; செஞ்சிகோட்டையை பார்வையிட பொதுமக்களுக்கு நாளை அனுமதியில்லை

விழுப்புரம்: செஞ்சிக் கோட்டையை பார்வையிட யுனெஸ்கோ குழுவினர் வருகை தர உள்ளதால் நாளை (27ம் தேதி) ஒரு நாள் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டையை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோவிற்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து யுனெஸ்கோ குழுவினர் செஞ்சி கோட்டையை பார்வையிட்டு ஆய்வு செய்ய நாளை (27ம் தேதி) வர உள்ளனர். இவர்களுடன் மத்திய அரசின் உயரதிகாரிகளும், இந்திய தொல்லியல் துறையின் உயரதிகாரிகள் குழுவினரும் வர உள்ளனர்.இதனிடையே செஞ்சி கோட்டையில் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், பொறியாளர்கள் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

இதில் கல்யாண மகாலில் வெளிப்பகுதியில் வண்ணமடித்து அழகு படுத்தி உள்ளனர். அகழிகள், நீர் நிலைகளை சீரமைத்துள்ளர், பூங்காங்களையும், புல் தரைகளையும் அழகு படுத்தி உள்ளனர். கோட்டை குறித்த வரலாற்று தகவல்களையும் வெண்கலத்தால் ஆன கல்வெட்டில் வைத்துள்ளனர். யுனெஸ்கோ குழுவினர் நாளை ஆய்வு செய்ய உள்ளதால் நாளை ஒரு நாள் மட்டும் கோட்டையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் இதற்காக மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி கேட்டுக்கொண்டுள்ளார்.

The post யுனெஸ்கோ குழுவினர் வருகை; செஞ்சிகோட்டையை பார்வையிட பொதுமக்களுக்கு நாளை அனுமதியில்லை appeared first on Dinakaran.

Related Stories: