மாற்று ஏற்பாட்டு பணிகளின் நிலை குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பு சென்னை மாநகராட்சியிடம் அறிக்கை!

சென்னை: மாற்று ஏற்பாட்டு பணிகளின் நிலை குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பு சென்னை மாநகராட்சியிடம் அறிக்கை சமர்பித்துள்ளது. 25 இடங்களில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளின் காரணமாக, மழைநீர் வடிகால் கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளன. மழைநீர் வெளியேறும் கால்வாய்கள் மூடல் போன்ற பிரச்சனைகளால் மழைநீர் தேங்கியது கண்டறியப்பட்டது.

பருவமழை தொடங்கும்முன் சீர் செய்யாவிடில் தொடர் மழை பெய்யும் போது சென்னையில் முக்கிய இடங்களில் நீர் தேங்கும் அபாயம் இருந்தது. மழைநீர் தேங்குவதை தடுப்பது குறித்து மாநகராட்சி தொழில்நுட்ப வல்லுநர் குழு 25 இடங்களிலும் மாற்று ஏற்பாடுகள் செய்ய பரிந்துரைத்தது. அனைத்து பணிகளையும் செப்.30-க்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது.

மாநகராட்சி அறிவுறுத்தல்படி ஒக்கியம்மடுகு கால்வாய் நீர்வழி பாதை சீரமைப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 18 இடங்களில் மழைநீர் வெளியேற கனரக மோட்டார்கள், குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட மாற்று ஏற்பாடு பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள இடங்களில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் செப்.30-க்குள் பணிகள் முடிக்கப்படும் எனவும் அறிக்கை சமர்பித்துள்ளது.

 

The post மாற்று ஏற்பாட்டு பணிகளின் நிலை குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பு சென்னை மாநகராட்சியிடம் அறிக்கை! appeared first on Dinakaran.

Related Stories: