மும்பை, பால்கர், நாசிக் பகுதிகளில் விடிய விடிய கொட்டிய கனமழை: வெள்ளத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழப்பு

மும்பை: மும்பையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை கொட்டியது. நேற்று மாலை முதல் இரவு 10மணி வரை 5 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை கொட்டியதால் மும்பையில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் பாதித்தது. கொலாபா, சான்டாக்ரூஸ், செம்பூரை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து முடங்கும் அளவு மழை கொட்டியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கனமழையால் பைபாஸ் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், 14 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 4பேர் உயிரிழந்ததாக மகராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. நள்ளிரவுக்கு பிறகு மும்பையில் மழை குறைந்த நிலையில் இந்திய வானிலை மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மஹாராஷ்டிராவின் பால்கர் மற்றும் நாசிக் மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தானே, ராய்கட், பூனே உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மும்பை, பால்கர், நாசிக் பகுதிகளில் விடிய விடிய கொட்டிய கனமழை: வெள்ளத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: