எடை அதிகரிப்பது அல்லது குறைப்பது என்று வரும்போது ஒரு சிலருக்கு மிகவும் கடினமான ஒன்றாகவும் ஒரு சிலருக்கு மிக எளிதான ஒன்றாகவும் இருக்கும். அந்தவகையில், ஒல்லியாக இருக்கும் சிலர் என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடை போடாது. அவர்கள், உடல் எடையை கணிசமாக அதிகரிக்க உதவும் புரோட்டீன் ஷேக்குகளை தொடர்ந்து அருந்தி வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும். அதற்கான சில புரோட்டீன் ஷேக் வகைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
டார்க் சாக்லேட் பாதாம் பட்டர் ஷேக்
உடல் எடையை அதிகரிக்கும் புரோட்டீன் ஷேக்குகளில் முதலில் குறிப்பிட தகுந்த சிறந்த புரோட்டீன் ஷேக்காக இருப்பது டார்க் சாக்லேட் பாதாம் பட்டர் ஷேக் ஆகும். டார்க் சாக்லேட் மற்றும் பாதாம் வெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் புரோட்டீன் ஷேக்கில் நிறைய கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரதங்கள் அடங்கி இருக்கின்றன. எனவே, இந்த ஷேக் உடல் எடையை அதிகரிக்க சிறப்பாக உதவுகிறது.
பீனட் பட்டர் பனானா ஷேக்
வேர்க்கடலை, பட்டர் மற்றும் வாழைப் பழங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பீனட் பட்டர் பனானா புரோட்டீன் ஷேக். உடல் எடையை இது வேகமாக அதிகரிக்க உதவும். இதை வீட்டிலேயே எளிதாக தயார் செய்யலாம்.
அவகேடோ சாக்லேட் ஷேக்
ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால் மேற்கண்டவற்றை போலவே இந்த அவகேடோ சாக்லேட் புரோட்டீன் ஷேக்கும் சிறந்த தேர்வாக இருக்கும்.
பனானா, மேங்கோ மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஷேக்
உடல் எடையை அதிகரிக்க மற்றொரு சிறந்த வழி மாம்பழம், வாழைப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி புரோட்டீன் ஷேக் ஆகும். இந்த புரோட்டீன் ஷேக் செய்வதும் மிகவும் எளிதானது மற்றும் சில நிமிடங்களில் தயார் செய்து விடலாம். எனவே, இந்த ஷேக்கை தினசரி டயட்டில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் எடையை நினைத்தபடி வேகமாக அதிகரிக்கலாம்.
பனானா மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஷேக்
வாழைப்பழம் எடையை அதிகரிக்க நன்றாக உதவுகிறது. எனவே வாழைப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரியை மட்டுமே வைத்து புரோட்டீன் ஷேக் செய்யலாம். இந்த ஷேக் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும். மிகவும் ஆரோக்கியமானது என்பதோடு சுவையாகவும் இருக்கும்.
தொகுப்பு: ரிஷி
The post உடல் எடை அதிகரிக்க உதவும் புரோட்டின் ஷேக்குகள்! appeared first on Dinakaran.