சரும தழும்புகளை போக்க சில தீர்வுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

சருமத்தில் சின்ன சிராய்ப்பு முதல் பெரிய காயம், புண், அறுவை சிகிச்சைக்கு பின் தழும்பு ஏற்படுவது வழக்கம். இவற்றில் சில எளிதில் மறைந்துவிடும். வடுவை, தழும்பை ஏற்படுத்திவிடும். இதை எளிதில் வீட்டிலிருந்தே குணமாக்கிக் கொள்ள சில வழிகள் இதோ..

*சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதத்துடன் வைத்துக் கொண்டாலே தழும்புகள் மறையத் தொடங்கும். இளம் வெயில் சருமத்தில் படுமாறு தினம் சிறிது நேரம் நிற்க உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும். இது சரும அலர்ஜி, தழும்புகளை போக்கும்.

*வைட்டமின் ஈ தழும்புகளை போக்க வல்லது. வைட்டமின் ஈ கலந்த கிரீம் அல்லது எண்ணெயை எடுத்து மிருதுவாக சருமத்தில் மசாஜ் செய்து தடவி வர தழும்புகள்
மறையும்.

*ரெடினால் அமிலம் என்று கேட்டால் பார்மஸியில் கிடைக்கும். வைட்டமின் ஈ போலவே பாதிக்கப்பட்ட சருமத்தை சரி செய்யும். மருத்துவரின் ஆலோசனையும் இதை உபயோகிக்க பக்க விளைவுகள் ஏற்படாது.

*லாவண்டர், பாதாம் போன்ற எண்ணெய்களை தழும்பு உள்ள இடத்தில் தினசரி தடவி வர சருமத்தின் மென்மை தன்மையை தக்க வைக்க உதவும்.

*தினமும் குளித்தபின் பாடி லோஷனை தழும்புகள், பருக்கள் உள்ள இடத்தில் தடவி வர தழும்புகள் மறையும்.

*குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பருக்கள் வந்த பள்ளங்கள், தழும்புகளை போக்கும்.

*தேங்காய் எண்ணெயை தினசரி குளிக்கும் முன் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின் குளித்து வர சருமத்தில் ஏற்பட்ட தழும்புகள், சுருக்கங்கள் நீங்கும். சரும நிறத்தை மாற்றி பொலிவைத் தரும். தீக்காயங்களால் உண்டான தழும்புகளைக் கூட தேங்காய் எண்ணெய் போக்கும்.

*பாடிலோஷனை தடவி வர தழும்புகள் மறைவதோடு சருமம் பொலிவோடு அழகாக இருக்கும்.

*சந்தனம், மஞ்சள் இரண்டையும் கலந்த கலவையை தழும்புகள் மீது போட்டு வர தழும்புகள், வடுக்கள் மறையும்.

*அரோமா ஆயில், எசென்சியல் ஆயில் ஆகியவற்றை தொடர்ந்து உபயோகிக்க நல்ல நிவாரணம் கிடைக்கும்.

– மகாலட்சுமி சுப்ரமணியன்

The post சரும தழும்புகளை போக்க சில தீர்வுகள்! appeared first on Dinakaran.

Related Stories: