திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ச.சீனிவாசன் தலைமை தாங்கினார். பேரணியை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்தப் பேரணியில் 50க்கும் மேற்பட்ட காதுகேளாத மாற்றத்திறனாளி மாணவ, மாணவியர்கள் மற்றும் காதுகேளாதோர் சங்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு சைகை மொழி என் கையில், சைகை மொழியை போற்றுவோம், சைகை மொழியே என் மொழி, என் கையே என் வாய், சர்வதேச காதுகேளாதோர் தினம் வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
முன்னதாக சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் மற்றும் காதுகேளாத சங்கத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் மலர்களை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில் பயிற்சி உதவி கலெக்டர் ஆயுஸ் குப்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சர்வதேச காதுகேளாதோர், இந்திய சைகை மொழி தின பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.