கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

 

திருவாரூர், செப். 21: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை வரும் 30ந் தேதி வரை நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கையானது நேரடி சேர்க்கையாக நடைபெறவுள்ளதால் மாணவர்கள் வரும் 30ந் தேதி வரையில் நேரடியாக விண்ணப்பித்து சேர்ந்துகொள்ளலாம்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு மற்றும் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கல்விதகுதி, வயதுவரம்பு, இடஓதுக்கீடு ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் விளக்க கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி, விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், காலணி மற்றும் பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் இதுதொடர்பான விரிவான விவரங்களுக்கு 9865072426, 9047643393, 9677394290, 9499055742 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

The post கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories: