கேழ்வரகு பால் அல்வா

தேவையானவை:

கேழ்வரகு – கால் கிலோ,
நெய் – தேவைக்கேற்ப,
சர்க்கரை – கால் கிலோ,
முந்திரி – 10,
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்,
ஜாதிக்காய் தூள் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

கேழ்வரகை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலை கிரைண்டரில் அரைத்து 4 முறை பால் எடுக்கவும். இந்த கேழ்வரகு பாலை 2 மணி நேரம் வைத்திருந்தால் தெளிந்து விடும். மேலே நீர்த்திருக்கும் நீரை எடுத்து விடவும். கடாயில் சர்க்கரையை போட்டு தண்ணீர் ஊற்றி, ஜீரா பதத்தில் காய்ச்சவும். இதில் தெளிந்த கேழ்வரகு பால், நெய் ஊற்றி கிளறி அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், முந்திரி தூவி இறக்கவும். சுவையான கேழ்வரகு பால் அல்வா தயார்.

The post கேழ்வரகு பால் அல்வா appeared first on Dinakaran.