காலிபிளவர் – 2 கப்அரிசி – 2 கப்
பச்சை பட்டாணி – 1/2 கப்
பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கியது)
சீரகம் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 / 4 டீஸ்பூன்
உப்பு-சுவைக்கு போதுமான
எண்ணெய்-போதுமானது
செய்முறை:
முதலில் அரிசியை சமைத்து வைத்துக் கொள்ள வேண்டும்..பிறகு கடாயில் சிறிது தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து காலிஃபிளவர் சேர்த்து 10 நிமிடம் வதக்க வேண்டும்..10 நிமிடம் கொதித்ததும் தண்ணீரை வடித்து காலிஃப்ளவரை தனியாக வைக்கவும்.இப்போது மீண்டும் காலிஃப்ளவரை நல்ல தண்ணீரில் கழுவி தனியாக வைக்கவும். காலிஃபிளவர் ஆறிய பிறகு, விரும்பிய அளவில் வெட்டிக் கொள்ளவும்.ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காலிஃப்ளவரை பொன்னிறமாகும் வரை வறுத்து, தனியே வைக்கவும்.மற்றொரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.இப்போது முன்பு வறுத்த காலிஃப்ளவரை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.. ஒரு முறை வதங்கிய பின் அதனுடன் அரிசியை சேர்த்து வதக்க வேண்டும்..முழு கலவையை கலக்கும்போது 1/4 டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து முழு கலவையையும் வதக்கவும்.இறுதியாக கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். அவ்வளவுதான், சுவையான மற்றும் சூப்பரான காலிஃபிளவர் சாதம் தயார். இது மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு சப்பிடலாம்.. முக்கியமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் அலுவலகம் செல்லும் கணவன் அல்லது மனைவிக்கும் ஏற்ற சூப்பரான லஞ்சாக இருக்கும்..
The post காலிஃபிளவர் புலாவ் appeared first on Dinakaran.