வேக வைத்த முட்டை – 2
கோதுமை மாவு – 1 கப்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உள்ளே வைப்பதற்கு…
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் வேக வைத்த முட்டையை துருவிக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு கைகளால் கிளறி விட வேண்டும்.பின் அதில் சிறிது நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.அடுத்து துருவி வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கிளறி, 3 நிமிடம் வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்க வேண்டும்.பின் பிசைந்து வைத்துள்ள மாவை மீண்டும் நன்கு பிசைந்து, சிறிது மாவை எடுத்து உருட்டி, கோதுமை மாவில் பிரட்டி, நன்கு மெல்லியதாக தேய்த்து, நடுவே சிறிது முட்டை கலவையை வைத்து, அப்படியே மடித்து, லேசாக தட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் தேய்த்து, நடுவே முட்டையை வைத்து மூடி லேசாக தட்டிக் கொள்ள வேண்டும்.இறுதியாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்துள்ளதைப் போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், வித்தியாசமான முட்டை ரெசிபி தயார்.
The post முட்டை ஸ்டப்டு பூரி appeared first on Dinakaran.