நிறுத்தி வைக்கப்பட்ட குவாரிகளை திறக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கோட்டை நோக்கி செல்ல இருந்த பேரணி தடுத்து நிறுத்தம்..

செங்கல்பட்டு: தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு மண் உரிமையாளர்கள் சங்கங்கள் மற்றும் தோழமை சங்கங்கள் சார்பில் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் இருந்து 500லாரிகள் பேரணியாக கோட்டை நோக்கி செல்வதாக திட்டமிட்டு அதற்கான ஏற்ப்பாடுகளை செய்து பேரணி புறப்படும் தருவாயில் இருந்தது.

பேரணியை தடுக்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி பேரணியை தடுத்து நிறுத்தினர். அதனால் அங்கேயே 300க்கும் மேற்ப்பட்ட லாரி உரிமையாளர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆந்திரா மற்றும் கர்நாடகா. மாநில லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் யுவராஜ் செய்ததியாளர் களிடம் பேசும் போது கடந்த 11மாதங்களாக ஒருபிடி மணல்கூட கிடைக்கவில்லை. எம்ஸ்டேன்ட் மணல்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் சம்மந்தப்பட்ட அந்த அமைச்சரின் பதிவியை தமிழக முதல்வரே நேரடி பார்வையில் வைத்து மணல்குவாரியை மீண்டும் அமல்படுத்தினால் அரசுக்கு அதிகளவிலான வருவாய் கிடைக்கும்.

இதுகுறித்து முறையிடுவதற்காக சிங்கபெருமாள் கோயில் பகுதியில் இருந்து 500
லாரிகளுடன் கோட்டை நோக்கி பேரணியாக செல்ல இருந்த நிலையில் தமிழக போலீசார் அதை தடுத்து நிறுத்திவிட்டனர். இருந்தாலும் நாங்கள் அடுத்த கட்டமாக முதல்வரின் வீட்டுக்கே சென்று முறையிடுவோம். அதுமட்டுமின்றி எத்தனை தடைகள் வந்தாலும் முதல்வரை சந்தித்து எங்களது குறைகளை சொல்லாமல் விடமாடோம் என யுவராஜ் பேசினார்.

 

The post நிறுத்தி வைக்கப்பட்ட குவாரிகளை திறக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கோட்டை நோக்கி செல்ல இருந்த பேரணி தடுத்து நிறுத்தம்.. appeared first on Dinakaran.

Related Stories: