நம்பி வணங்குபவர்களுக்கு நண்பராய் காப்பார் திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற திருமோகூர் காளமேகப்பெருமாள்…!

*புரட்டாசி ஸ்பெஷல்

புரட்டாசி பிறந்திருச்சு… இந்த முழுவதும் பெருமாளுக்கு விசேஷமானது. பெரும்பாலானோர் சைவம் மட்டுமே சாப்பிடுவாங்க… முக்கியத்துவம் வாய்ந்த இம்மாதத் தில் பெருமாள் கோயில்களில் ஒரு ரவுண்டு வரலாமா? மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் இருக்கிறது திருமோகூர், இங்குள்ள காளமேகப்பெருமாள் கோயில் மிக வும் விசேஷமானது. மூலவராக காள மேகப்பெருமாள் வீற்றிருக்க, மோக னவல்லி தாயார் அம்பாளாக காட்சி கோயில் திருகிறம், தாளதால் லையுளுகரிணி, கொண்டிருக்கிற இக்கோயில் பல நூற்றாண்டு பழமை கொண்டது. கோயிலின் தல வரலாறை பார்ப்போமா?

தல வரலாறு: காளமேகம் என் நால் கருமேகம். எப்படி மேகமானது நீரை உறிஞ்சி தனக்குள் வைத் துக்கொண்டு, அதை மக்களுக்கு மழையாக பெய்விப்பதுபோல, இத்த லத்தில் மகாவிஷ்ணு, அருள் எனும் மழையை தருவதால் காளமேகப் பெருமாள் என்றழைக்கின்றனர். பஞ்சாயுதங்களுடன் காட்சி தரும் இவர். மார்பில் சாளக்ராம மாலை அணிந்து, வலது கையால் தன் திருவடியைக் காட்டியபடி இருக்கி றார்.

இங்குள்ள உற்சவரை ஆப் தன்’ என்கின்றனர். ஆப்தன் என் றால் நண்பன். வழிபடுபவர்களுக்கு உற்ற நண்பனாகவும், அவர்களது இறுதிக்காலத்திற்கு பிறகு வழித்து ணைவனாகவும் அருள்வதால், இவ ருக்கு இப்பெயர் ஏற்பட்ட தென்கின்ற தேவர்களுக்கு சுவாமியின் நித்தி ரைக்கு இடையூறு இன்றியும், அதே சம யம் தங்களது குறை யையும் சொல்ல வேண்டும் என்ற நிலையில், அவரை எழுப்ப விரும்பாத அவர்கள், ஸ்ரீதேவி, பூதேவியிடம் தாங்கள் வந்த நோக்கத்தைச் சொல்லிவிட்டு திரும்பி விட்டனர்.

இப்போது தாயார்கள் இருவ ருக்கும், தேவர்களின் வேண்டுதலை சுவதசியிடம் அவரல்ல வேண்டும், கலைக்கக்கூடாது என்ற நிலை. எனவே, அவர்களிருவரும் மன திற்குள் வேண்டிக்கொள்ளவே, மகாவிஷ்ணு கருணையுடன் கண் திறந்து, மோகினி வடிவில் சென்று தேவர்களுக்கு அருள்புரிந்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு பெருமாளுக்கு சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இவர் வலது கையை தலைக்கு வைத்து சயனித்திருக்கிறார்.

பாதத்திற்கு அரு கில் தாயார்கள் இருவரும் கைகளை தாழ்த்தி வைத்து, பிரார்த்தனை செய் யும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இவருக்கு, பிரார்த்தனை சயனப்பெருமாள் என்றொரு பெயரும் இருக்கிறது. கோயிலில் சக்க ரத்தாழ்வார் சன் னதி உள்ளது. இவருக்கான உற்ச வர் சிலையில் 154 மந்திரங்களும், மூல வர் சிலையில் மந் திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள் ளன.

பதினாறு கைகளில் ஆயுதங் களுடன் காட்சி தரும் இவர், அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் திருப்பாற்கடல் தீர்த்தம்…. இச் சன்னதிக்கு கீழே திருப்பாற்கடல் தீர்த்தம் இருப்பதாக ஐதீகம், பாற்கட லின் ஒரு துளி இதில் விழுந்ததால் இப்பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு வேண்டிக்கொள்ள மோட்சம் கிடைக்கும் என்பம் நம்பிக்கை. 108 திவ்ய தேசங்களில் இது 94 வது திவ்ய தேசம் பெருமை கொள் கிறது. வைகாசியில் பிரம்மோற்ஸ வம், ஆனியில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம். வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் திருக்கல் யாணம் என முக்கிய திருவிழாக் கள் இங்கு விசேஷமாக நடக்கின் றன.

மோட்ச தீபம்

இக்கோயில் மோட்சதீப வழிபாட் டிற்கு சிறப்பு பெற்றதாகும். முன் னோர்களுக்கு முக்தி கிடைக்க, செய்யும் செயல்கள் வெற்றி பெற இங்கு வேண்டிக்கொள் கின்றனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து நேர்த்திக்க டன் நிறைவேற்றுகின்றனர்.

நடை திறப்பு

நேரம் காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
சனிக்கிழமைகளில் அதிகாலை 5.30 1 திறப்பு.

The post நம்பி வணங்குபவர்களுக்கு நண்பராய் காப்பார் திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற திருமோகூர் காளமேகப்பெருமாள்…! appeared first on Dinakaran.

Related Stories: