×

சிந்து நதி நீர் ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்

புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 1960ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில் உலக வங்கியும் கையெழுத்து இட்டுள்ளது. எல்லை தாண்டிய நதிகளின் நீரை பயன்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு வழிமுறை இதில் உருவாக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் அடிப்படையான மற்றும் எதிர்பாராத மாற்றங்களை மேற்கோள் காட்டி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 30ம் தேதி பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

The post சிந்து நதி நீர் ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,New Delhi ,World Bank ,Dinakaran ,
× RELATED சுங்கச்சாவடிகளுக்கு டாட்டா…....