×

கர்நாடகாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜ எம்எல்ஏ மீது பாலியல் வழக்கு


பெங்களூரு: கர்நாடக பாஜவின் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான முனிரத்னா மீது பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, ஒப்பந்ததாரரை சாதி ரீதியாக பேசி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் ராஜேஸ்வரி நகர் தொகுதியின் உறுப்பினரும் பாஜவை சேர்ந்தவருமானவர் முனிரத்னா. இவர் மீது பெங்களூருவை சேர்ந்த பெண், ராம்நகரா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து முனிரத்னா எம்எல்ஏ உள்பட 7 பேர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டிய பெண்ணிடம் காவல்துறை துணை ஆணையர் வாக்குமூலம் பெற்றார். அதில், ‘தனியார் விடுதியில் எம்எல்ஏ உள்ளிட்டோர் பாலியல் வன்கொடுமை செய்தனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்ததாரரை சாதியை குறிப்பிட்டு அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு அக்ரஹாரா சிறையில் முனிரத்னா அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், முனிரத்னாவுக்கு எதிராக ஒக்கலிகா மற்றும் தலித் சமூக அமைப்புகள் போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை பாஜவுக்கு எதிரான ஆயுதமாக காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.

The post கர்நாடகாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜ எம்எல்ஏ மீது பாலியல் வழக்கு appeared first on Dinakaran.

Tags : BJP MLA ,Karnataka ,Bengaluru ,BJP ,former ,minister ,Munirathna ,
× RELATED கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை...