×

உ.பி.யில் போலீஸ் கஸ்டடியில் தாக்கப்பட்ட தலித் சிறுவன் உயிரிழப்பு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஹேரி மாவட்டம் சிஸவான் காலா கிராமத்தை சேர்ந்த 16 வயது தலித் சிறுவனுக்கு திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 3ம் தேதி ஹேரி போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவனை போலீசார் கடுமையாக தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டான். உடனே லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்.பி. கணேஷ் பிரசாத் சஹா தெரிவித்துள்ளார். இதனிடையே, சிறுவன் இறந்த செய்தியை அறிந்ததும் அக்கிராம மக்கள், சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய கோரி, தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post உ.பி.யில் போலீஸ் கஸ்டடியில் தாக்கப்பட்ட தலித் சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : UP ,Lucknow ,Sisawan Kala ,Uttar Pradesh ,Hari district ,Hari ,Dinakaran ,
× RELATED டாக்டரிடம் மோசடி செய்த இந்திய பெண் தூதர்