டெல்லி: ரூ.2,104 கோடி மதிப்பில் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1,236 கோடியில் 2028-ல் வெள்ளி கிரகத்தில் ஆய்வு செய்வதற்கான செயற்கைக்கோளை அனுப்பும் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை சந்திரயான் 4 விண்கலம் மூலம் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.