உதகை அருகே குறிஞ்சி மலர் பூத்துள்ள மலை பகுதிக்கு வெளி ஆட்கள் யாரும் செல்லக் கூடாது: வனத்துறை உத்தரவு

நீலகிரி: உதகை அருகே குறிஞ்சி மலர் பூத்துள்ள மலை பகுதிக்கு வெளி ஆட்கள் யாரும் செல்லக் கூடாது என வனத்துறை உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எப்பநாடு அருகே பிக்கப் பத்தி மந்து மலை பகுதியில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும் விலங்குகள் நடமாட்டம் இருப்பதாலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post உதகை அருகே குறிஞ்சி மலர் பூத்துள்ள மலை பகுதிக்கு வெளி ஆட்கள் யாரும் செல்லக் கூடாது: வனத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: