பல அதிமுக தலைவர்கள் பாஜவுக்கு ஜால்ரா தட்டுறாங்க: கொதிக்கும் பெங்களூரு புகழேந்தி

பெரியார் பிறந்த நாளையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக., தலைவர்கள் ஒன்று சேரவேண்டும்.

வரும், 2026ல் அதிமுக., தோல்வியடைந்தால் எங்களையும் சேர்த்து தொண்டர்கள் துரத்தி துரத்தி அடிப்பர். பொறுப்பை உணர்ந்து, தொண்டர்களின் கருத்தை மதித்து, நடக்க வேண்டும். பல அதிமுக., தலைவர்கள் பாஜ.,வுக்கு ஜால்ரா தட்டுகிறார்கள். அதிமுக.,வினர் பார்க்காத பணமில்லை. அனைத்தையும் அனுபவித்து விட்டனர். கட்சியை காப்பாற்றுங்கள். பிரஸ்டீஜ் பார்க்காதீர்கள் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post பல அதிமுக தலைவர்கள் பாஜவுக்கு ஜால்ரா தட்டுறாங்க: கொதிக்கும் பெங்களூரு புகழேந்தி appeared first on Dinakaran.

Related Stories: