×

ஓசூரில் பவள விழா

ஓசூர், செப்.18: ஓசூரில் ஒன்றிய திமுக சார்பில் கட்சி பவள விழா மற்றும் பெரியார் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்து சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பவள விழா முன்னிட்டு, கட்சி கொடியை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக மேயர் சத்யா வரவேற்றார். நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, தலைமை செயற் குழு உறுப்பினர் எல்லோரமணி, ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, மண்டல குழு தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் ,பஞ்சாயத்து தலைவர் வீரபத்திரப்பா, இளைஞரணி கலைசெழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஓசூரில் பவள விழா appeared first on Dinakaran.

Tags : Coral festival ,Hosur ,Periyar ,Union DMK ,West District ,DMK ,Prakash MLA ,Samathuvapuram ,Coral Festival in Hosur ,
× RELATED மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்