×

72 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்

ஓசூர், செப்.17: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சீதாராம் அரசு உருது மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்1 பயிலும் 72 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தேவசேனா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் நவ்சத் வரவேற்றார். இதில் மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ மற்றும் மேயர் சத்யா கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் சீனிவாசலு, மோசின் தாஜ் நிசார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அயூப் கான், நிர்வாகிகள் ஹரிபிரசாத், தினேஷ், மஞ்சு, பிரபாகர், அல்லா பக்ஷா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கடந்து கொண்டனர். விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை பிரபாவுக்கு நினைவு பரிசு, சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.

The post 72 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Sitaram Government Urdu Higher Secondary School ,Hosur Corporation ,Headmaster ,Devasena ,Dinakaran ,
× RELATED ஓசூர்- தர்மபுரி 4 வழிச்சாலையில் மின்...