×

2 கடைகளில் தீ விபத்து

ஊத்தங்கரை, செப்.14: ஊத்தங்கரை கல்லாவி சாலையில் சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் சுமதி என்பவர், மின்சாதனங்கள் பழுது பார்க்கும் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகில் ஜெயராமன் என்பவரது பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்த கடைகளை நேற்று காலை வழக்கம் போல் திறந்து வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென எலக்ட்ரிக் கடையில் தீப்பிடித்தது. அந்த தீ கொழுந்து விட்டு எரிந்து, பரவியதில் அருகிலுள்ள பேன்சி கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் எலக்ட்ரிக் கடை முழுவதுமாக தீ பற்றிய நிலையில் கடையில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமானது. மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

The post 2 கடைகளில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Oodhangarai ,Subramania Swamy Temple ,Kallavi Road ,Sumathi ,Jayaraman ,shops ,Dinakaran ,
× RELATED பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி